DAILY HOROSCOPE - இன்றைய ராசி பலன்கள் (17.11.2020)

. . No comments:

Previous Article >>>>>   DAILY HOROSCOPE 14.11.2020






மேஷம்

சந்திரன் இன்றைய தினம் எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும் சிக்கனம் தேவை. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது.


ரிஷபம்

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஏழாம் வீட்டிலும் எட்டாம் வீட்டிலும் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சற்று மந்த நிலை ஏற்படும். தேவையில்லாமல் மற்றவர்கள் மீது கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு பிற்பகலுக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளையும், பயணங்களையும் தவிர்ப்பது உத்தமம்.


மிதுனம்

சந்திரன் சாதகமான இடத்தில் பயணம் செய்கிறார். இன்று உறவினர்களால் மனமகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.


கடகம்

சந்திரன் சஞ்சாரத்தினால் இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிலவும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.


சிம்மம்

சந்திரன் இன்றைய தினம் நான்காம் வீட்டில் இருந்து ஐந்தாம் வீட்டிற்கு பயணம் செய்கிறார். இன்று நீங்கள் மனக்குழப்பத்துடனும், கவலையுடனும் காணப்படுவீர்கள். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட கால தாமதமாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளியிலிருந்து வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். சேமிப்பு உயரும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.


கன்னி

சந்திரன் சஞ்சாரம் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீட்டிலும் நான்காம் வீட்டிலும் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். சேமிப்பு குறையும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் வழியில் உதவிகள் கிட்டும்.


துலாம்

சந்திரன் இன்றைய தினம் இரண்டாம் வீட்டிலும் மூன்றாம் வீட்டிலும் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் படிப்பு சம்பந்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். திருமண தடைகள் விலகும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.


விருச்சிகம்

உங்கள் ராசியில் சூரியன், சந்திரன், கேது சஞ்சாரம் உள்ளது. இன்று நீங்கள் எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை குறையலாம். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். பிற்பகலுக்கு மேல் சந்திரன் இரண்டாம் வீட்டிற்கு இடப்பெயர்சி அடைவதால் தெய்வ வழிபாடு நல்லது.


தனுசு

சந்திரன் உங்க ராசிக்குள் நுழைகிறார். இன்று உங்களுக்கு வியாபாரம் சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகள் தொடங்க நல்ல நாளாகும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலாகும்.


மகரம்

சந்திரன் உங்களுடைய ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் உண்டாகலாம். நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படும். உடன் பிறப்பிடம் ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.


கும்பம்

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு லாப ஸ்தானத்திற்குள் நுழைகிறார். இன்று உத்தியோகத்தில் உங்கள் திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வராத பழைய கடன்கள் கைக்கு வந்து சேரும். வங்கி சேமிப்பு உயரும்.


மீனம்

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். குடும்பத்தில் -சுபசெலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். இன்று வேலை செய்யும் இடத்தில் உற்சாகம் அதிகரிக்கும்

No comments:

Post a Comment

Thank You for Read this post
For More Latest Update Pls Subscribe our Site
Like Tamil Cinema Face Book page and Follow Twitter page

Followers

Blog Archive

Popular Posts

Total Pageviews

About Us

TamilCinema Brings U non Stop Entertainment... Exclusive Breaking News on What’s Happening on Current Kollywood Cinema Today...

Start like Our Facebook Page and Keep in Touch our site here every day :)


Contact Us

e-mail->

Admin

Tamilcinema

tamilabccinema@gmail.com