Daily Horoscope - இன்றைய ராசி பலன்கள் (14.11.2020)

. . No comments:

 



மேஷம்

சந்திரன் உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இல்லத்தில் உற்சாகம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். தாராள தனவரவு உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். உங்களுடைய முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும். சுப முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். பழைய கடன்கள் தீரும். சொந்த பந்தங்களுடன் பாசம் அதிகரிக்கும்.


ரிஷபம்

சந்திரன் இன்று ஆறாவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பெண்கள் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். செலவில் சிக்கனம் தேவை. பிள்ளைகளின் படிப்பு நன்றாக இருக்கும். தொழில் ரீதியாக வெளிவட்டார நட்பு உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தேடி வரும். மனதளவில் உற்சாகமாக உணர்வீர்கள்.

சொந்தங்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.


மிதுனம் 

சந்திரன் இன்று உங்க ராசிக்கு ஐந்தாவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களின் உடல் ஆரோக்கியத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் ஆடம்பர பொருட்களால் செலவுகள் அதிகமாகும். உடன்பிறந்தவர்களிடம் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் சில இடையூறுகள் இருந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

கடகம் 

சந்திரன் உங்க ராசிக்கு நான்காவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் வரலாம். பூர்வீக சொத்துக்கள் மூலம் அலைச்சல் ஏற்பட்டாலும் அதற்கேற்ற பலன் கிடைக்கும். சிக்கனமாக செயல்பட்டால் பணப் பிரச்சினைகளை தவிர்க்கலாம். குடும்பத்தில் உள்ள நெருக்கடிகள் குறையும். குதூகலமாக இருப்பீர்கள்.


சிம்மம் 

சந்திரன் உங்க ராசிக்கு மூன்றாவது வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் தேடி வரும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் நன்மைகள் ஏற்படும். உங்களுடைய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். மனதளவிலும் உடல் ரீதியாகவும் உற்சாகமாக இருப்பீர்கள்.


கன்னி 

சந்திரன் உங்க ராசிக்கு இரண்டாவது வீட்டில் சஞ்சரிக்கிறார். குடும்பத்தில் குதூகலமாக இருப்பீர்கள். இல்லத்தில் சுபகாரியங்கள் கைகூடி வரும். இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். அரசு துறையில் பணிபுரிபவர்க்கு கவுரவ பதவிகள் தேடி வரும். தொழிலில் இதுவரை எதிரியாக இருந்தவர் கூட நண்பராக மாறி செயல்படுவார். பிள்ளைகளுக்கு படிப்பில் ஈடுபாடு அதிகரிக்கும்.


துலாம் 

சந்திரன் உங்க ராசிக்குள் சஞ்சரிக்கிறார். உங்க வீட்டிற்கு உறவினர்கள் வருவது மகிழ்ச்சியை தரும். பிள்ளைகள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த கடன்கள் வசூலாகும். மனதிலும் உடலில் உற்சாகம் அதிகரிக்கும்.


விருச்சிகம் 

சந்திரன் உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எதிர்பாராத உதவி தேடி வரும். இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகளால் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் பாதிப்பும் ஏற்படாது. பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்படும் விட்டுக்கொடுத்து போகவும்.


தனுசு 

சந்திரன் உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். வியாபாரத்தில் லாபம் வரும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். சுப காரிய பேச்சுவார்த்தைகள் வெற்றியில் முடியும்.


மகரம் 

சந்திரன் உங்க ராசிக்கு பத்தாவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுடைய பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வியாபார வளர்ச்சிக்கான முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உற்றார் உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.


கும்பம் 

சந்திரன் உங்களுடைய ராசிக்கு ஒன்பதாவது வீட்டில் பயணம் செய்கிறார். உங்களுடைய மனதில் இருந்த கவலையும் குழப்பமும் மறையும். வியாபாரத்தில் ஏற்பட்டிருந்த வீண் பிரச்சினைகள் மறையும். கடந்த 2 நாட்களாக இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.


மீனம் 

சந்திரன் உங்க ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த விஷயத்திலும் கவனமுடன் செயல்பட வேண்டும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சிலும் செயலிலும் நிதானத்தை கடைபிடிங்க. தொழிலில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. சுப முயற்சிகளை தவிர்க்க வேண்டும். பேசி பிரச்சினையில் மாட்டிக்கொள்வதை விட மவுன விரதம் நல்லது.

No comments:

Post a Comment

Thank You for Read this post
For More Latest Update Pls Subscribe our Site
Like Tamil Cinema Face Book page and Follow Twitter page

Followers

Blog Archive

Popular Posts

Total Pageviews

About Us

TamilCinema Brings U non Stop Entertainment... Exclusive Breaking News on What’s Happening on Current Kollywood Cinema Today...

Start like Our Facebook Page and Keep in Touch our site here every day :)


Contact Us

e-mail->

Admin

Tamilcinema

tamilabccinema@gmail.com