தேவையான பொருட்கள்
·
பாஸ்மதி அரிசி
- 1 கிலோ
·
சிக்கன் - 1 கிலோ
·
எண்ணை - 100 கிராம்
·
நெய் - 150 கிராம்
·
வெங்காயம் - 04
·
தக்காளி - 02
·
இஞ்சி,பூண்டு பேஸ்ட்
- 3 ஸ்பூன்
·
பட்டை, பிரியாணி
இலை, கிராம்பு,ஏலக்காய் - சிறிதளவு
·
மல்லி
·
புதினா - 1 fg;
·
பச்சை மிளகாய்
– Njitahd msT
·
தயிர் - 1கப்
·
மிளகாய் தூள் -
Njitahd
msT
·
மஞ்சள் தூள் -
1/2 டீஸ்பூன்
·
மல்லித் தூள் -
1 டீஸ்பூன்
·
எலுமிச்சை – 1
செய்முறை
குக்கரில் (Pressure Cooker) நெய்யும் எண்ணையும் ஊற்றி பட்டை , கிராம்பு பிரியாணி
இலை ஏலக்காய் போட்டு பொரிய விடவும். அத்துடன் இஞ்சி பூண்டு போட்டு வதங்கியதும் வெங்காயம்
போட்டு நன்றாக கிளறவும் இத்துடன் தக்காளி போட்டு குழைய வதக்கவும். வதங்கிய உடன் பாதி கொத்தமல்லி, புதினா இலையைப் போட்டு கிளறவும்.
பின் அதில்
பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், போட்டு வதங்கியவுடன் சிக்கன், சிறிதளவு
உப்பு, தயிர் ஊற்றி நன்றாக கிளற வேண்டும். தனியா பொடி (கொத்தமல்லி தூள்), 1/2 மூடி
எலுமிச்சை சாறு விட்டு வேக விடவும். சிக்கன் நன்கு வெந்த உடன் எண்ணைய் மேல் வரும் போது
1கப் அரிசிக்கு ஒன்றரை கப் அளவு நீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்ததும்
ஊறவைத்த அரிசியை கழுவி போடவும். மீத முள்ள கொத்தமல்லி, புதினா தழை போட்டு வேகவிடவும்.
இத்துடன் சரியான அளவு உப்பு போட்டு மூடி வைக்கவும். விசில் போட வேண்டாம்.
பாதி வேகும் வரை தீயை அதிகமாக வைக்கவும். முக்கால்பகுதி
வெந்தவுடன் ஸ்டவ்வை சிம்மில் வைத்து அரிசி எலுமிச்சையை பிழிந்து ஊற்றவும். பின்னர்
விசில் போட்டு தம்மில் போடவும். இதனால் கோழி ஸாப்ட்டாக வெந்திருக்கும் குழைய வாய்ப்பில்லை. 10 நிமிடம் கழித்து விசில் எடுத்து
விடலாம் சுவையான ஸ்பெசல் பிரியாணி ரெடி இதற்கு ராய்தா, எண்ணை கத்திரிக்காய் சேர்த்து
பரிமாறலாம்.
No comments:
Post a Comment
Thank You for Read this post
For More Latest Update Pls Subscribe our Site
Like Tamil Cinema Face Book page and Follow Twitter page