DAILY HOROSCOPE - இன்றைய ராசி பலன்கள் (19.11.2020)

. . No comments:

 

                        Daily Horoscope in Tamil Today

Today Rasi Palan in Tamil (November 18, 2020): Get your Daily Horoscope in Tamil based on your zodiac signs.

Previous Post --- >>> Daily Horoscope (18.11.2020)




மேஷம்

ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சரிக்கிறார். இன்று அற்புதமான நாள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆலய தரிசனம் அற்புதத்தை ஏற்படுத்தும். உங்க உடல் நலம் நன்றாக இருக்கும் திருமணம் காதல் விவகாரங்கள் சந்தோஷத்தை கொடுக்கும். திருமணமான தம்பதியர் இடையே நெருக்கம் கூடும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தவும். சந்தோஷமான நாள் இது. வேலை விசயத்தில் கவனம் தேவை.


ரிஷபம்

அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் காரியத்தடைகள் ஏற்படும். உடல் நலத்தில் கவனமாக இருக்கவும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்க. கடன் வாங்கவோ, கடன் கொடுக்கவோ வேண்டாம். உங்க திருமண வாழ்க்கையும், காதல் வாழ்க்கையும் இன்றைக்கு சந்தோஷத்தை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருங்க.


மிதுனம்

உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் சந்திரன் சஞ்சரிக்கிறார். களத்திர ஸ்தானத்தில் இருந்து உங்க ராசியின் மீது சந்திரன் பார்வை விழுகிறது. பணவரவு அதிகமாக இருந்தாலும் விரைய செலவுகள் வரலாம் கட்டுப்படுத்துங்கள். குடும்பத்தில் குதூகலமாக இருக்கும். கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்லவும்.


கடகம்

இன்றைய தினம் சந்தோஷமான நாள் காரணம் ஐந்து கிரகங்கள் ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கின்றன. குடும்பம் குதூகலமாக இருக்கும். உடல் நலம் அற்புதமாக இருக்கும். தினம் தினம் திருநாளே என்பது போல இன்றைக்கு சந்தோஷமாக இருப்பீங்க. வேலை செய்யும் இடத்தில் சுமாரான நாள்தான். உடல் நலம் நன்றாக இருக்கும்.


சிம்மம்

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரங்களே, இன்றைக்கு ஐந்தாம் வீட்டில் சந்திரன் சஞ்சரிக்கிறார். அற்புதமான நாள். உடல் நலம் நன்றாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் கிடைக்கும். வாழ்க்கை துணை மீது காதல் அதிகமாகும். சந்தோஷமும் அதிகமாகும். மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துங்கள்.


கன்னி

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் சஞ்சரிக்கிறார். அம்மாவின் உடல் நலத்தில் கவனம் தேவை. இன்று காதலான நாள் இது. சந்தோஷ மூடில் இருப்பீர்கள். வாழ்க்கை துணையின் நலனில் அக்கறை காட்டுங்கள். கோபமான பேச்சுக்களை தவிர்க்கவும். உங்களுடைய வார்த்தைக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். சந்தோஷமான நாளாக இன்றைய தினம் அமைந்துள்ளது.


துலாம்

உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டில் சந்திரன் சஞ்சரிக்கிறார். முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். உங்க சந்தோஷத்திற்கு இன்றைக்கு அளவே இருக்காது. உடல் நலம் அற்புதமாக இருக்கும் பணவரவு தாராளமாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் விட்டுக்கொடுத்து செல்லவும். பேச்சில் கவனம் தேவை. கோபத்தை கட்டுப்படுத்தவும். காதல் விவகாரங்கள் மன மகிழ்ச்சியை அதிகரிக்கும்.


விருச்சிகம்

இன்றைய தினம் உங்க ராசிக்குள் இருக்கும் சூரியனால் கோபம் எட்டிப்பார்க்கும் கவனம் தேவை. குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் இருப்பதால் புதிய முயற்சிகளுக்கு தடை உண்டாகும். குருவினால் பணவரவு அதிகரிக்கும். திருமண வாழ்க்கை சந்தோஷத்தை கொடுக்கும். அலுவலக வேலையில் கவனமாக இருக்கவும் வீண் வம்பு பேச்சுக்கள் வேண்டாம். மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.


தனுசு

சந்திரன் இன்றைய தினம் உங்க ராசியில் சஞ்சரிக்கிறார். விரைய ஸ்தானத்தில் சூரியன் இருக்கிறார். சின்னச் சின்ன சஞ்சலங்கள் வரும். திடீர் செலவுகள் எட்டிப்பார்க்கும். உங்க அன்புக்குரியவர் உங்களை சர்ப்ரைஸ் ஆக சந்தோஷப்படுத்துவார். மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக மாறும். வேலை செய்யும் இடத்தில் கவனம் தேவை. மனதில் ஏற்படும் குழப்பத்தை போக்க தியானம் செய்யுங்கள்.


மகரம்

விரைய ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சரிப்பதால் பணவரவு இருந்தாலும் தேவையில்லாத செலவுகள் உங்களை கஷ்டப்படுத்தும். உங்களின் உடல் நலம் அற்புதமாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் சின்னச் சின்ன சண்டைகள் வரும் கவனம் தேவை. வேலை செய்யும் இடத்தில் கவனமும் விழிப்புணர்வு அவசியம்.


கும்பம்

சந்திரன் இன்றைய தினம் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இன்றைய தினம் லாபகரமான நாள். பணவருமானம் அற்புதமாக இருக்கும் உங்க உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். வேலை செய்யும் இடத்தில் பிரச்சினைகள் வரலாம் வேலையில் கவனமாக இருங்கள். உங்க எதிர்காலத்தை திட்டமிட இது நல்ல நாள். பணத்தை பத்திரப்படுத்தினால் மட்டுமே விரைய செலவுகளை தவிர்க்க முடியும்.


மீனம்

பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சரிப்பதால் வேலை செய்யும் இடத்தில் புரமோசன் கிடைக்கும். சம்பள உயர்வு பற்றிய நல்ல செய்தி தேடி வரும். புதிய தொழில் தொடங்கினால் லாபத்தை கொடுக்கும். அற்புதமான நாள். குடும்பம் குதூகலமாக இருக்கும். காதல் மலரும் நாள் இது. திருமண வாழ்க்கையில் உங்க வாழ்க்கை துணை மீது அன்பு அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.


No comments:

Post a Comment

Thank You for Read this post
For More Latest Update Pls Subscribe our Site
Like Tamil Cinema Face Book page and Follow Twitter page

Followers

Blog Archive

Popular Posts

Total Pageviews

About Us

TamilCinema Brings U non Stop Entertainment... Exclusive Breaking News on What’s Happening on Current Kollywood Cinema Today...

Start like Our Facebook Page and Keep in Touch our site here every day :)


Contact Us

e-mail->

Admin

Tamilcinema

tamilabccinema@gmail.com