ஐபிஎல் 13ஆவது சீசன் 29ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன.பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெற 8 போட்டிகளில் வெற்றிபெற்றாக வேண்டும் வேண்டிய நிலையில், சென்னை அணி முதல் 7 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. எஞ்சியுள்ள 7 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், இன்று நடைபெற உள்ள போட்டியில் சென்னை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்பத்தி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹைதராபாத் அணி கடைசியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக விளையாடியபோது, 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. அதேபோல, சென்னை அணி கடந்த இரண்டு போட்டிகளில் மோசமான தோல்வியை பதிவு செய்தது. இதனால், இன்றைய போட்டியில் வெற்றிபெற இரு அணிகளும் கடுமையாகப் போராட வேண்டிய நெருக்கடியில் உள்ளன.
No comments:
Post a Comment
Thank You for Read this post
For More Latest Update Pls Subscribe our Site
Like Tamil Cinema Face Book page and Follow Twitter page